முகப்பு தமிழகம்

லேப்டாப் வழங்கக்கோரி நல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம்

36

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2017-2018ம் கல்வி ஆண்டில் பிளஸ்2 படித்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இதனால்  மாணவர்கள் பள்ளிக்கு எதிரே மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தெள்ளார்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.