சமீபத்திய செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை தூர்வார விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை தூர்வார நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு பின் வருமாறு மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகள் மற்றும் அவற்றிற்கான நீர்வழி பாதைகளை புனரமைக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை பொது மக்கள். தன்னார்வலர்கள். தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்புடன் செயல்படுத்தும் போது இப்பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்று மாவட்ட நிர்வாகம்...

தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா

வந்தவாசி அடுத்த குணகம்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு வ. மணி தலைமை வகித்தார். வந்தவாசி ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார். கணினி ஆசிரியர் பா. சுரேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, #தொல்லியல் #துறை சார்ந்த காப்பாட்சியர் அ. ரஷீத் கான் அவர்கள் பங்கேற்று, தொன்மை வாய்ந்த நிகழ்வுகளையும், தொல்லியல் துறை சார்ந்த பல்வேறு #கல்வெட்டுகள், #ஓலைச்சுவடிகள், பல்வேறு காலகட்டங்களில் கிடைக்கப்பெற்ற #சிற்பங்கள் பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார். மேலும் கற்காலம் முதல்...

புரிசை அருள்மிகு எல்லையம்மன் ஆலய ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமை உற்சவம்

புரிசை அருள்மிகு எல்லையம்மன் ஆலய ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமை உற்சவம்

திருக்குறள் ஒப்பித்தல் வந்தவாசி அரசுப் பள்ளி மாணவி உலக சாதனை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் #மூன்றாம்_வகுப்புபடித்து வருபவர் மாணவி தர்ஷினி 289 வினாடிகளில் 150 திருக்குறள் ஒப்பித்து மேலும் மாணவிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் சென்னையில் இயங்கி வரும் வேர்ல்ட் ரெக்கார்ட் விண்ணப்பம் செய்திருந்தார் அதனை தொடர்ந்து மாணவிக்கு தர்ஷினி உலக சாதனை வழங்க முடிவு செயதனர் இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் ஆட்சியர் தலைமையில் மாணவி தர்ஷினி 289 விநாடிகளில் அதாவது 4.49 நிமிடங்களில் 150 திருக்குறளை ஒப்பித்து சாதனை புரிந்தார் இதனைத் தொடர்ந்து உலக...

வந்தவாசியில் மின்தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக 20-07-2019 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி நகரம், கீழ்க்கொடுங்காலூர், புரிசை, தெள்ளாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று வந்தவாசி கோட்ட மின்வாரியம் அறிவிப்பு.

வந்தவாசியில் பாலிஷ் போடுவதாக கூறி 10 சவரன் நகை கொள்ளை – வடமாநில இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வந்தவாசியில் பாலிஷ் போட்டு தருவதாக கூறி ஓய்வு பெற்ற பெண் அலுவலரிடம் 10 சவரன் நகைகளை நூதன முறையில் திருடிச் சென்ற 2 வடமாநில இளைஞர்களை போலீசார்தேடிவருகின்றனர். வந்தவாசி நகரில் உள்ள பிராமணர் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சாந்தா (வயது 64), ஓய்வு பெற்ற ஒன்றிய ஆணையாளரான இவர் தனது வீட்டின் முன் அமர்ந்து இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். இதை தொடர்ந்து சாந்தா தான் அணிந்திருந்த 7...

அத்திவரதர் தரிசனத்திற்கு வந்தவர் வந்தவாசியில் தங்கியபோது உயிரிழப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்காக வந்தபோது, வந்தவாசியில் திருமண மண்டப தங்கிய நிலையில், அங்குள்ள படிக்கட்டில் தவறி விழுந்த நபர்  உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (62). இவர் தனது மனைவி வசந்த கோகிலா மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்களுடன் அத்திவரதரை தரிசிக்க 2 பேருந்துகளில் காஞ்சிபுரத்துக்கு கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டுள்ளனர். செல்லும் வழியில் வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை இரவு தங்கினர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காஞ்சிபுரத்துக்கு புறப்படுவதற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது ராமலிங்கம், மண்டப...

லேப்டாப் வழங்கக்கோரி நல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2017-2018ம் கல்வி ஆண்டில் பிளஸ்2 படித்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இதனால்  மாணவர்கள் பள்ளிக்கு எதிரே மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தெள்ளார்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

வந்தவாசியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம். வந்தவாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இ-அடங்கல் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் கணினி மற்றும் இணையதள வசதிகளை செய்துதரவும்,  ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணி நியமனம் செய்துள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வந்தவாசி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

வந்தவாசி அரிமா சங்க புதிய தலைவராக கே.ராமச்சந்திரன், வந்தவாசி மலைநகர அரிமா சங்கத் தலைவராக கே.பாலசுப்பிரமணியசுவாமி, வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி லியோ சங்கத் தலைவராக சுமித்ரா உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ்.தளபதி, மண்டல தலைவர் எஸ்.பி.தினமணி, வட்டாரத் தலைவர் எஸ்.மீனாட்சிசுந்தரம், மாவட்ட தலைவர்கள் டி.ராமலிங்கம், கோகுலகிருஷ்ணன், ஆர்.சரவணன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.