முகப்பு அண்மைச் செய்தி

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

36

வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது: தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி,கோவை, திண்டுக்கல், நெல்லை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வெப்பசலனத்தினால், சென்னையில் அடுத்த 2 நாளுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், வேடசந்தூரில் 7 செ.மீ., தேவாலாவில் 4 செ.மீ., பெரியாறு, நடுவட்டம் பகுதிகளில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம், களியாக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.