திட்டமிட்டபடி தேர்வுகள்: அண்ணா பல்கலை.,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதன் காரணமாக இதுவரை 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலை., சார்பில் ஏற்கனவே இன்று தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ழ தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யலாம்.. Dismiss